அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு விவசாயிகள் வாக்களிக்க கூடாது பி.ஆர்.பாண்டியன் பேட்டி
அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணிக்கு விவசாயிகள் வாக்களிக்க கூடாது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
சுந்தரக்கோட்டை,
மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாநில நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரிசி ஆலை முகவர்கள் சங்க தலைவர் இமயவரம்பன், நிர்வாகிகள் ஜீவானந்தம், நீலன்அசோகன், விவசாயிகள் மன்றம் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி செந்தில் வரவேற்றார்.
கூட்டத்தில் புதிய அலுவலகத்தை உயர் மட்டக்குழு உறுப்பினர் ஞானசேகரன் திறந்து வைத்தார். இதில் அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்கள் நாகை ராமதாஸ், தஞ்சை மணி, தஞ்சை வடக்கு ரமேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் தஞ்சை துரை பாஸ்கரன், திருவாரூர் சுப்பையன், தஞ்சை வடக்கு கலியமூர்த்தி, நாகைபாலசுப்பிரமணியன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன், நகர தலைவர் தங்கமணி உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் செயலாளர் பி.கே.கோபிந்தராஜ் நன்றி கூறினார்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
காவிரிக்கு மாற்று காவிரி தான். தற்போது கோதாவரியை காவிரியுடன் இணைப்போம் என்று சொல்லி மத்திய, மாநில அரசுகள் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே தமிழக விவசாயிகளை ஒன்றிணைத்து மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்துவதோடு வருகிற ஜூன் 1–ந்தேதி ராசிமணல் அணைகட்டும் பணியை தொடங்க உள்ளோம்.
நெல் கொள்முதல் சீர்குலைந்துள்ளது. நெல்லை பெற்று கொண்டு 2 மாதங்களாகியும் பணம் பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடப்பது வேதனையளிக்கிறது. எனவே அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு விவசாயிகள் வாக்களிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story