தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த “2 ஆயிரம் ராணுவத்தினருக்கு தபால் ஓட்டு”


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த “2 ஆயிரம் ராணுவத்தினருக்கு தபால் ஓட்டு”
x
தினத்தந்தி 1 April 2019 3:00 AM IST (Updated: 1 April 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் ராணுவத்தினர் தபால் ஓட்டு போட உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் ராணுவத்தினர் தபால் ஓட்டு போட உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஜெயிலில் உள்ளவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 30 ஆயிரம் தபால் ஓட்டுகள் அச்சடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வேறு அச்சகத்தில் அச்சடிக்கும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதே போன்று வாக்குச்சீட்டு எந்திரத்தில் பொருத்துவதற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சடிக்கும் பணி சென்னையில் நடந்து வருகிறது.

ராணுவ வீரர்கள்

இந்த நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வருபவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் ஓட்டுகள், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ள இணையதளத்தில் அனுப்பப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் ராணுவவீரர்களின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் தபால் ஓட்டுகளை பதிவிறக்கம் செய்து, வாக்களிக்கலாம். சம்பந்தப்பட்ட ராணுவ முகாம் கமாண்டரின் கையொப்பத்துடன் ஒப்புகை சீட்டு பெற்று அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஓட்டுகள் மே மாதம் 23-ந் தேதி காலை வரை தபால் அலுவலகத்தில் பெறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட உள்ளது.

Next Story