மோடி பிரதமரானால் தான் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் தம்பிதுரை பேச்சு


மோடி பிரதமரானால் தான் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 4:15 AM IST (Updated: 1 April 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மோடி பிரதமரானால் தான் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை பேச்சு.

வையம்பட்டி,

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்களும் அடுத்தடுத்து தொகுதி மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அதன்படி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மு.தம்பிதுரை நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார். ஊத்துக்குளியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், கிராம மக்களிடம் பேசினார். அப்போது, காவிரி குடிநீர் தேவை என்பது அனைவரின் வேண்டுகோள். காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கான திட்டம் தயாராக உள்ளது. ஆனால் காவிரியில் தற்போது தண்ணீர் இல்லை. நமக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கர்நாடக அரசு தர வேண்டும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஆகவே டெல்லியில் பிரதமரைத் தான் நாட வேண்டும், பிரதமர் மோடியிடம் கேட்டால் தான் காவிரியில் தண்ணீர் கிடைக்கும். எனவே மோடி மீண்டும் பிரதமராகவும், அவரது கரத்தை வலுப்படுத்தவும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பேராசிரியர் பொன்னுசாமி, புலவர் செங்குட்டுவன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமி மற்றும் கட்சி பிரமுகர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்றனர். 

Next Story