போஸ்டரில் ஆதித்ய தாக்கரே படம் இல்லாததால் சர்ச்சை எதிெராலி உத்தவ் தாக்கரேயுடன் பூனம் மகாஜன் திடீர் சந்திப்பு
போஸ்டரில் ஆதித்ய தாக்கரே படம் இல்லாததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து வடமத்திய மும்பை பா.ஜனதா வேட்பாளர் பூனம் மகாஜன் உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார்.
மும்பை,
போஸ்டரில் ஆதித்ய தாக்கரே படம் இல்லாததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து வடமத்திய மும்பை பா.ஜனதா வேட்பாளர் பூனம் மகாஜன் உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார்.
ஆதித்ய தாக்கரே படம்
வடமத்திய மும்பை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போது அங்கு எம்.பி.யாக உள்ள பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். இதில் அவர் பிரசாரத்திற்காக அச்சிட்ட விளம்பர போஸ்டர்களில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரே, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலைவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.
அந்த போஸ்டர்களில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயின் படம் இல்லாதது வடமத்திய மும்பை தொகுதி சிவசேனா இளைஞர் அணியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பூனம் மகாஜனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட போவதில்லை என கூறியுள்ளனர்.
உத்தவ் தாக்கரேயுடன் சந்திப்பு
இதுகுறித்து அப்பகுதி சிவசேனா இளைஞர் அணி தலைவர் ராகுல் கனால் கூறுகையில், ‘‘நாங்கள் கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் பூனம் மகாஜன் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றும் வரை அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம். எங்கள் தலைவர்களுக்கே இந்த நிலையென்றால் அவர் எப்படி எங்களை மதிப்பார்’’ என்றார்.
இதுகுறித்து பூனம் மகாஜனிடம் கேட்ட போது, இது ஒரு சாதாரண பிரச்சினை, பேசி தீர்க்கப்படும் என்றார்.
இந்தநிலையில் பூனம் மகாஜன் நேற்று திடீரென உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோரை மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் விளம்பர போஸ்டர் பிரச்சினை குறித்து விளக்கம் அளித்து, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேயை தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story