அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 1 April 2019 12:46 PM IST (Updated: 1 April 2019 12:46 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ரெயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ரிட்ஸ். இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் (கிரேடு இ, டி. மற்றும் சி) பணிகளுக்கு 40 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரெயில்வே நிறுவனம்

இந்திய ரெயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ரிட்ஸ். ரெயில்வே கட்டமைப்புக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வது இந்த நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், பட்டதாரி என்ஜினீயர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேசன், ஆர்கிடெக்சர், சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 3-4-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
www.rites.com
என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

ஜிப்மர்

ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ‘ஜிப்மர்’ (JIPMER) என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியில் செயல்படும் இந்த கல்வி-ஆராய்ச்சி மையத்தில் தற்போது பேராசிரியர். உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 70 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனட்டாமி, அனஸ்திசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மெடிசின், இ.என்.டி., டென்டிஸ்ட்ரி, ஆப்தமாலஜி, ஆர்த்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பேத்தாலஜி, பார்மகாலஜி, சைகியாலஜி, சைகியாட்ரி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாசிஸ், சர்ஜரி உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. இவை தவிர கற்பித்தல் சாராத லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துபடிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு படித்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லோயர் டிவிசன் கிளார்க் பணி விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
www.jipmer.edu.in
என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மே 1-ந் தேதியாகும்.

வானிலை ஆராய்ச்சி மையம்

இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் (கிரேடு இ, டி. மற்றும் சி) பணிகளுக்கு 40 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் துறைசார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை
www.imd.gov.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 42 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 14-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உர நிறுவனம்

தேசிய உர நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ரெப்ரசன்டேடிவ் பணியிடங்களுக்கு 40 பேரை தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதார்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ்சி. (அக்ரி) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
www.nationalfertilizers.com
என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 18-ந் தேதியாகும்.


Next Story