உணவு பாதுகாப்பு- தர நிறுவனத்தில் 275 வேலைவாய்ப்புகள்


உணவு பாதுகாப்பு- தர நிறுவனத்தில் 275 வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 1 April 2019 12:57 PM IST (Updated: 1 April 2019 12:57 PM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் 275 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறு வனம், சுருக்கமாக (FSSAI) என்று குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரி, உணவு பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர், பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு 130 பேரும், உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 37 பேரும், உதவியாளர் பணிக்கு 34 பேரும், பெர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு 25 பேரும், உதவி இயக்குனர் பணிக்கு 20 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் அசிஸ்டன்ட், அசிஸ்டன்ட் மேனேஜர், ஐ.டி. அசிஸ்டன்ட், டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

பி.இ., பி.டெக் படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் இதர இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர் களுக்கு சில பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பெண் விண்ணப்பதாரர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://fssai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story