மாவட்ட செய்திகள்

சேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு + "||" + Near Senthamangalam, drinking water Public road traffic with vaccinations Traffic vulnerability

சேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு

சேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது பேரமாவூர் கிராமம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யாததால் ரூ.7 கொடுத்து ஒரு குடம் குடிநீர் மற்றும் ரூ.5 கொடுத்து ஒரு குடம் உப்பு நீரை வாங்கி பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த கிராமத்தின் அருகில் எல்லிபாளையத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே அப்பகுதியில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதை தொடர்ந்து அந்த பணிகள் மேற்கொள்ள பணியாளர்கள் தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று அத்தியம்பட்டி பஸ் நிறுத்தம் வந்து நாமக்கல் மெயின் ரோட்டில் திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த சாலைமறியல் போராட்டத்தில் காலிக்குடங்களுடன் கலந்து கொண்ட பெண்கள் சீரான குடிநீர் கேட்டு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இதையறிந்த சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜ், சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ், அக்கியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்குமார், கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுதர்சன் ஆகியோர் விரைந்து சென்று அங்கு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓமலூர் அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
2. குடிநீர் கேட்டு மேட்டூரில் பொதுமக்கள் சாலைமறியல் ஆத்தூரில் பஸ் சிறைபிடிப்பு
மேட்டூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஓசூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஓசூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4. நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.