100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 1 April 2019 10:45 PM GMT (Updated: 1 April 2019 8:32 PM GMT)

அரியலூர் அண்ணாசிலையில் இருந்து மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2019 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கிணங்க, அரியலூர் அண்ணாசிலையில் இருந்து மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும், எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அரியலூர் அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்திரம் சென்று மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story