வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 2 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு இளம் குழந்தைகான பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு மற்றும் ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள தமிழ்நாடு இளம் குழந்தைகான பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு மற்றும் ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ரோஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஜான் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கிராமிய பாடகர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலை குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், பறையிசை, கரகாட்டம், காவடியாட்டம் மூலம் பொதுமக்களுக்கு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இந்த பிரசார வாகனம் அரியலூர், கீழப்பழுவூர், வி.கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், காடுவெட்டி, ஆண்டிமடம், வாரியங்காவல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. 
1 More update

Next Story