நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மேள தாளத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து அம்மன் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைதொடர்ந்து பொங்கல் வழிபாடு நடை பெறுகிறது.
தொடர்ந்து 8-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story