வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 April 2019 4:20 AM IST (Updated: 2 April 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை எம்.பி. தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 11 அடையாள ஆவணங்கள் வருமாறு:–

பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், வருமான வரி கணக்கு அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மத்திய தொழிலாளர் நலத்துறை வழங்கிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவை.

வாக்காளரின் பெயர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் பட்சத்தில் மற்றொரு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பதிவு அலுவலர் வழங்கியுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கூறிய ஆவணங்கள் இருந்தால் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்கள். வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் வாக்களிக்க இயலாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story