திருமருகல் அருகே தங்க நாணயம் தருவதாக கூறி மோசடி 2 பேர் கைது
திருமருகல் அருகே தங்க நாணயம் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமருகல்,
நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர், கே.சி.ரோடு சாமியார் தெருவை சேர்ந்த திருமலை மகன் சரவணன் (வயது 25). அம்பாசமுத்திரம் வி.கே.புரத்தை சேர்ந்த பண்டாரம் மகன் பாலமுருகன்(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து நாகை மாவட்டம் திருமருகல் திருச்செங்காட்டங்குடி பகுதியில் கியாஸ் அடுப்பு, குக்கர், மின்விசிறி, போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்செங்காட்டங்குடியை சேர்ந்த செல்வி மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு போன் செய்து உங்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம், ஸ்கூட்டர் ஆகியவை பொருட்கள் விழுந்துள்ளதாகவும், இதற்கு முன்பணமாக ரூ.19 ஆயிரமும், பின்னர் ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும் எனவும் சரவணன், பாலமுருகனும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த பணத்தை உடனே வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய செல்வியும், உதயகுமாரும் தங்க நாணயமும், ஸ்கூட்டரும் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.29 ஆயிரத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் கூறியபடி சரவணன், பாலமுருகனும் தங்க நாணயம், ஸ்கூட்டர் தராமல் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்த செல்வி, உதயகுமார் ஆகியோர் திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், பாலமுருகனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமருகல் பஸ் நிலையம் அருகே 2 பேர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள், தங்க நாணயம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சரவணன், பாலமுருகன் என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story