போலீசாரை தாக்கிவிட்டு குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டி.வி. நடிகை 7 வாகனங்கள் சேதம்

போலீசாரை தாக்கிவிட்டு குடிபோதையில் காரை ஓட்டி சென்ற டி.வி. நடிகை விபத்தை ஏற்படுத்தினார். இதில் 7 வாகனங்கள் சேதம் அடைந்தன. நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் வசித்து வரும் டி.வி. நடிகை ருகி சைலேஷ்குமார் சிங் சம்பவத்தன்று நள்ளிரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் காரில் லிங்க் ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நடிகையுடன் இருந்தவர்கள் காரை நிறுத்தி, அந்த பகுதியில் இருந்த ஓட்டலில் உள்ள கழிவறையை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளனர்.
இதில், ஓட்டலை மூடிவிட்டதால் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அங்கு இருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும், நடிகை தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது நடிகை மற்றும் அவரது ஆண் நண்பர்கள் ராகுல், ஸ்வப்னில் ஆகியோர் போலீசாரை தாக்கினர். நடிகை போலீஸ்காரர் ஒருவரின் பேட்ஜையும் பறித்துள்ளார். இதையடுத்து போலீசார் ராகுல், ஸ்வப்னிலை கைது செய்தனர்.
இரவு நேரம் என்பதால் நடிகையை கைது செய்யாமல் அவரையும், அவருடன் இருந்த மேலும் 2 பேரையும் போலீசார் அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், குடிபோதையில் இருந்த நடிகை, மீண்டும் காரை ஓட்டி சென்றார். அப்போது சாந்தாகுருஸ் பகுதியில் வந்த போது கார் நடிகையின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
இதில் அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதினார். நடிகையின் கார் மோதியதில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் சிலர் அங்கு கூடினர். இதில் அவரது காரை சூழ்ந்து நின்று கொண்டு இருந்த மக்களை நோக்கி நடிகை அவதூறாக பேசினார். குடிபோதையில் அவர் பேசுவதை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இதைத்தொடர்ந்து நடிகை மீது கார் மற்றும் சாந்தாகுருஸ் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கார் போலீசார், போலீசாரை தாக்கியதாக நடிகை மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், ஸ்வப்னில் மீதும், சாந்தாகுருஸ் போலீசார் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக நடிகை மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நடிகை ருகி சைலேஷ் குமார் சிங் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். இவரது தந்தை சைலேஷ்குமார்சிங் பாட்னா ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

Related Tags :
Next Story