செஞ்சிலுவை சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசாரம்


செஞ்சிலுவை சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2019 4:00 AM IST (Updated: 3 April 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்கம், எக்ஸ்னோரா இளைஞர் சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசார நிகழ்ச்சி நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

திருச்சி,

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகராட்சி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்கம், எக்ஸ்னோரா இளைஞர் சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தெருமுனை நாடக பிரசார நிகழ்ச்சி நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. ஒரு மினி லாரியில் கல்லூரி மாணவர்கள் ஏறி நின்று ஏப்ரல் 18-ந்தேதி அனைவரும் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வசனங்கள் பேசி நடித்து காட்டினர்.

இந்த நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவரும், இந்திரா கணேசன் கல்வி நிறுவன செயலாளருமான ஜி.ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இந்த குழுவினர் திருச்சி மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து 10 நாட்கள் மக்கள் அதிகமாக கூடும் 100 இடங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு நாடக பிரசாரத்தை நடத்துவார்கள் என ராஜசேகரன் கூறினார். இதில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் தயாநிதி, பிரபாகரன், துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ், பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆசிய பிரதிநிதி லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story