வானவில் : தொலைந்ததை கண்டுபிடிக்க உதவும் ‘ஐகான்’
பொருட்களை மறந்து எங்கேயாவது வைத்து விட்டால் கண்டுபிடிக்க உதவும் ட்ராக்கர்கள்
பொருட்களை மறந்து எங்கேயாவது வைத்து விட்டால் கண்டுபிடிக்க உதவும் ட்ராக்கர்கள் பல வடிவங்களில் வந்துவிட்டன. அந்த வகையில் ‘ஐகான்’ எனப்படும் இந்த ட்ராக்கர் பல சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. இதை, நமது சாவிக்கொத்து, கைப்பை, லேப்டாப் இப்படி எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த ஐகானை ப்ளூடூத் மூலம் நமது செல்போனுடன் கனெக்ட் செய்துக் கொள்ளலாம். எல்லா ஸ்மார்ட் கருவிகளையும் போல இதையும் செயலி மூலம் இயக்கலாம். வை-பையோ ( WIFI ) டேட்டாவோ இதற்கு தேவையில்லை. இதன் பேட்டரி ஆறு மாதங்கள் வரை உழைக்கும். எழுபது மீட்டர் தொலைவு வரை நாம் தொலைத்த பொருளை கண்டுபிடித்துக் கொடுக்கும்.
இருட்டிலும் பொருட்களை நொடிகளில் கண்டுபிடித்து விடும். நமது ஸ்மார்ட் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் கூட அது இருக்குமிடத்தை காட்டி விடும். அதாவது போனை அலாரம் அடிக்க செய்யும். மறதியில் எங்கேயாவது பொருட்களை வைத்து விட்டு தேடி நேரத்தை விரயமாக்காமல் பார்த்து கொள்கிறது இந்த ஐகான் ட்ராக்கர்.
Related Tags :
Next Story