வானவில் : ஹெச். பி.யின் 8-வது தலைமுறை லேப்டாப்


வானவில் : ஹெச். பி.யின் 8-வது தலைமுறை லேப்டாப்
x
தினத்தந்தி 3 April 2019 3:35 PM IST (Updated: 3 April 2019 3:35 PM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டர் சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சர்வதேச நிறுவனம் ஹீயூலெட் பக்கார்டு (ஹெச்.பி.).

இந்நிறுவனம் புதிய சிறம்பம்சங்கள் கொண்ட லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 8-வது தலைமுறை இன்டெல் பிராசஸர்கள் மற்றும் 2-வது தலைமுறை ஏ.எம்.டி. ரைஸன் பிராசஸர்கள் உள்ளன. இவை ஹெச்.பி. என்.வி. 13, ஹெச்.பி. என்.வி. எக்ஸ்360 13, ஹெச்.பி. என்.வி. எக்ஸ்360 15, ஹெச்.பி. என்.பி. 17 லேப்டாப் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பாக வெப் கேமரா கில்ஸ்விட்ச் மற்றும் பிரைவசி ஸ்கிரீன் வசதிகள் உள்ளன. இந்த வசதியால் மற்றவர்கள் திரையில் ஊடுருவி உங்கள் தகவலை படிக்க முடியாது. இவற்றில் இரண்டு மாடல்கள் வழக்கமான லேப்டாப்களாகும்.

இவற்றின் என்.வி. 13 மற்றும் என்.வி. பிளான்ட் வடிவமைப்பு மெட்டாலிக் பாகங்களைக் கொண்டது. என்.வி. 13 மற்றும் என்.வி 17 மாடலில் 3 வழி முழுமையான மைக்ரோ எட்ஜ் புல் ஹெச்.டி. டிஸ்பிளே இருக்கும். இன்டெலின் 8-வது தலைமுறை கோர் ஐ7 பிராசஸர் உள்ளது. இதன் வேகம் 4.6 கிகாஹெர்ட்ஸ் ஆகும். இதில் என்.வி. 13 மாடல் விலை ரூ.62,200 மற்றும் என்.வி. 17 மாடல் விலை ரூ.1.43 லட்சமாகும்.

Next Story