வானவில் : மோட்டோ ஜி 7 அறிமுகம்


வானவில் : மோட்டோ ஜி 7 அறிமுகம்
x
தினத்தந்தி 3 April 2019 4:03 PM IST (Updated: 3 April 2019 4:03 PM IST)
t-max-icont-min-icon

மோட்டரோலா நிறுவனம் ஜி7 மற்றும் ஜி1 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் மோட்டோ ஜி 7 மாடல் விலை ரூ.16,999 ஆகும். மோட்டோ 1 மாடலின் விலை ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மோட்டோ ஜி 7 மாடலானது 7-வது தலைமுறையைச் சேர்ந்தது. இதில் 6.2 அங்குல தொடுதிரை முழுமையான டிஸ்பிளேயைக் கொண்டதாக வந்துள்ளது. முப்பரிமான (3டி) வளைவு கொண்ட கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி. பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவக வசதி இருக்கிறது. இதை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள வசதியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு பகுதியும் தரப்பட்டுள்ளது. இதில் முதன்மை கேமரா 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்டுள்ளது. அடுத்து 5 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட கேமராவும் உள்ளது. பின்புற கேமராவில் போர்ட்ரேட் மோட், ஆட்டோ ஸ்மைல், சினிமாகிராப், ஹெச்.டி.ஆர்., பி.டி.ஏ.எப்., கைரோ இ.ஐ.எஸ். ஆகிய வசதிகள் உள்ளன. செல்பி பிரியர்களுக்கென முன்புறத்தில் 8 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் நீண்ட நேரம் செயல்படும். அத்துடன் 15 வாட்ஸ் விரைவாக சார்ஜ் ஆகும் வசதியும் உள்ளது. 9 மணி நேரம் செயல்பட 15 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும். முகத்தை அடையாளம் கொண்டு (பேஸ் அன்லாக்) செயல்படும் வசதி மற்றும் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட செயல்பாடுகளைக் கொண்டது. இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இது கிடைக்கும்.

இந்தியாவில் மோட்டோ 1 என அறிமுகமாகியுள்ள இந்த மாடல் உலக அளவில் மோட்டோ 1 பவர் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இது 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. உள்ளடு நினைவக வசதி கொண்டது.

இதையும் விரிவாக்கம் செய்ய மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. பின்புற கேமரா 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. முன்பக்கத்தில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதிலும் 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 15 வாட்ஸ் திறனுடன் விரைவாக சார்ஜ் ஆகும் வசதி இருக்கிறது. 

Next Story