வானவில் : உப்புத் தண்ணீரில் பிரகாசமாய் எரியும் லாந்தர்
உப்புத் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை பல ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் உப்பு நீரில் இயங்கும் ஒரு மின்சார லாந்தர் விளக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் சால்ட் V 1 .0. ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை இதனுள் ஊற்றினால் போதும், நீரில் இருக்கும் எலெக்ட்ரோலைட்டுகள் மின்சாரத்தை உருவாக்கி விளக்கை எரியச் செய்யும்.
இது போன்று பல விளக்குகள் மார்க்கெட்டில் வந்துவிட்ட போதிலும், தரத்திலும் விலையிலும் இதுவே சிறந்ததாக இருக்கிறது. எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் இதை தரப்போவதாக சொல்கின்றனர். ஒரே ஒரு டம்ளர் தண்ணீரின் மூலம் நான்கு நாட்களுக்கு இந்த விளக்கு எரியும். இதற்கு எரியூட்ட கடல் நீரைத் தான் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. சாதாரண நீரில் உப்பு கலந்தும் உபயோகிக்கலாம். இது போன்ற மாற்று எரிபொருள் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கலாம்.
Related Tags :
Next Story