வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை–பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பளுகல் அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
களியக்காவிளை,
பளுகல் அருகே உள்ள வன்னியூர் கிடாரகுழி பகுதியை சேர்ந்தவர் செல்வசிங். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெபா (வயது 35). நேற்று முன்தினம் காலை செல்வசிங் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அதைதொடர்ந்து பகலில் ஜெபா வீட்டை பூட்டிவிட்டு மின் கட்டணம் செலுத்துவதற்காக களியக்காவிளைக்கு சென்றார்.
அங்கு மின் கட்டணம் செலுத்தி விட்டு ஜெபா வீடு திரும்பினார். அவர் வீட்டை திறந்து உள்ளே சென்ற போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7ஆயிரம் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஜெபா வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story