மாவட்ட செய்திகள்

திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததால் பரபரப்பு + "||" + ATM at Tiruvaiyailavalai The door of the machine was opened because the door was opened

திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததால் பரபரப்பு

திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததால் பரபரப்பு
திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்த கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம்,


திருச்சி திருவானைக்காவல் மேலவிபூதி பிரகாரத்தில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள எந்திரத்தில் நேற்று காலை பணம் எடுக்க சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


உடனே இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


சிறிது நேரத்தில் அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த எந்திரத்தின் தாழ்ப்பாள் பழுதடைந்ததால் முன்பக்க கதவு தானாக திறந்து கொண்டது தெரிய வந்தது. பின்னர், மெக்கானிக்கை வரவழைந்து எந்திரத்தின் தாழ்ப்பாள் பழுதை நீக்கப்பட்டது. எந்திரத்தின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததால் பணம் திருட்டு போயிருக்குமோ என்று வங்கி அதிகாரிகள் அச்சம் அடைந்தனர். ஆனால், பணம் எதுவும் திருட்டு போகாததால் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.