காரில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது
பெரம்பலூர் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது, காரின் கதவுகளுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது. இது குறித்து, அந்த காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு காரில் அதிக அளவில் பணம் கடத்தி கொண்டு செல்லப்படுவதாகவும், எனவே தீவிர வாகன சோதனை நடத்துமாறும், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ரங்கராஜன், துணை சூப்பிரண்டு ரவீந்திரன், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே, வேகமாக வந்த ஒரு வாடகை காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதில் பணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தீவிர சோதனை நடத்தியும் பணம் இருப்பதற்கான அறிகுறி இல்லை.
இதனால் காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, காரில் வந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஜெ.தங்கதுரை, திருச்சியை சேர்ந்த பிரபாகரன், சென்னை மாரஸ், தங்கம் ஆகியோர் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அந்த காரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுசென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் உறுதியானதாக இருந்ததால், காரின் இருக்கைகள் மற்றும் கதவுகளின் பாகங்களை பிரித்து சோதனை போட்டனர். இதில் கதவுகளின் உள்பகுதியில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கத்தை, கத்தையாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் இருப்பது வெளியே தெரியாமல் இருப்பதற்காக உதிரிபாகங்களையும் சேர்த்து மறைத்து வைத்து இருந்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் அந்த ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து எண்ணிப்பார்த்தனர்.
அதில் மொத்தம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 71 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பணம் சிக்கியது குறித்து அதில் வந்த 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பணம் யாருடையது? சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா? கொடுத்து அனுப்பியது யார்? என்பதை அரிய தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.2 கோடி பணம் சிக்கியது தொடர்பாக குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அந்தோணி, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தங்கதுரை (வயது 50) (இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்), திருச்சியை சேர்ந்த பிரபாகரன் (45) மாநில துணை செயலாளர், திண்டுக்கல்லை சேர்ந்த தங்கம் (42), சென்னை கே.கே.நகரை சேர்ந்த கார் டிரைவர் மாரஸ் கிளைவ் (40) ஆகிய 4 பேர் மீதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை எடுத்து செல்லுதல், வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக பணம் கடத்துதல், குற்றம் செய்ய முயற்சி, தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்பட 7 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் ரூ.2 கோடி சிக்கிய நிலையில், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ‘எல்பின்’ என்ற நிறுவனத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வருமான வரித்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்-லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜா, அச்சு ஊடக பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் காரில் சிக்கிய பணத்திற்கும் இந்த நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிடைத்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரி அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலக நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் உள்ளே இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இங்கு சோதனை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பகல் 11.30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் மற்றொரு காரில், கே.கே.நகரில் உள்ள ராஜா, ரமேஷ்குமார் ஆகியோருடைய வீடுகளுக்கும் சென்று சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, நிறுவனத்தின் முகவர் ஒருவர் ரூ.25 லட்சம் தொகை செலுத்த மன்னார்புரம் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நிறுவனத்தின் வளாகம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.
இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பணம் எதுவும் சிக்கியதா? என்பது குறித்து வருமான வரி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றிய தகவல் அறிந்ததும், வக்கீல்கள் சிலர் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அலுவலகத்துக்குள் அதிகாரிகள் அனுமதிக்காததால், அவர்கள் அலுவலக வளாகத்திலேயே நின்றனர்.
அப்போது நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதை நிறுத்துமாறு ஊழியர்களிடம் வருமான வரி அதிகாரிகள் கூறினர். ஆனால் இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை நிறுத்தாமல் சோதனை நடத்தவேண்டும் என்று கூறினார்கள். இதனால் கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவது நிறுத்தப்படாமல் சோதனை நடத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வருமான வரித்துறை சோதனை நடந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜாவை திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் ஒரு கும்பல் கடத்திச் சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது. பின்னர், கடத்தல்காரர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து விட்டு, காரை கடத்திச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜாவை கட்சி நிர்வாகிகள் மீட்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story