மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு
மோகனூர் பகுதியில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.
மோகனூர்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் நேற்று மோகனூர் ஒன்றிய, நகர பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதையொட்டி அவர் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட லத்துவாடி, அணியாபுரம், தோளூர், ஆரியூர், ஒருவந்தூர், ஆண்டாபுரம், கொமரிபாளையம், எஸ்.வாழவந்தி, ஓலப்பாளையம், நன்செய் இடையார் மற்றும் மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், அ.தி.மு.க. ஆட்சியில் மோகனூர் பகுதியில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை பொதுமக்களிடம் எடுத்து கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்திரமோகன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் சரவணன், மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாக்கு சேகரிக்க சென்ற இடம் எல்லாம் வேட்பாளர் காளியப்பனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
Related Tags :
Next Story