மாவட்ட செய்திகள்

சேலத்தில்வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு + "||" + In Salem Jewelry with jewelry, money flush

சேலத்தில்வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

சேலத்தில்வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு
சேலத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம், 

சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 28). இவர் ரெட்டியூர் பகுதியில் உள்ள அண்ணாதிடல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்ம ஆசாமி ஒருவர் நடந்து வந்தார்.

திடீரென்று குமாரை அந்த மர்ம ஆசாமி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டார். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரம், கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி என மொத்தம் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான நகை, பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த குமார் சத்தம் போட்டார். இதைகேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்து மர்ம ஆசாமியை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அழகாபுரம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த தீனதயாளன் என்று தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் துணிகரம்: ஸ்கூட்டரில் தாயுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தஞ்சையில் ஸ்கூட்டரில் தாயுடன் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. வேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரம்
வேலூரில் போலீஸ் நிலையம் அருகிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்று விட்ட னர். இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சத்திரப்பட்டியில், வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு, இ- சேவை மையத்திலும் மர்ம நபர்கள் கைவரிசை
சத்திரப்பட்டியில், வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோக்களில் இருந்த 8 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தை திருடிச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள இ- சேவை மையத்திலும் அவர்கள் கைவரிசை காட்டிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. நாகரசம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
நாகரசம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டில் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.