கிளாம்பாக்கத்தில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு கார் டிரைவர் தற்கொலை


கிளாம்பாக்கத்தில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு கார் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 April 2019 4:00 AM IST (Updated: 4 April 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாக்கத்தில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் அறிஞர் அண்ணா காலனி, அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 53). இவர் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி (51). இவர்களது மகன் ஸ்ரீதர் வினோத் (27) சிறுவயது முதல் மனவளர்ச்சி குன்றியவராக காணப்பட்டார். மேலும் இவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்று கூறப்படுகிறது. மகள் திவ்யா. திருமணமாகி விட்டது.

மன வளர்ச்சி குன்றிய மகனை நினைத்து மனமுடைந்த பெருமாள் நேற்று மனைவி வெளியே சென்ற நேரத்தில் மகன் ஸ்ரீதர் வினோத்துக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து விட்டு அவர் மயங்கி கீழே விழுந்தவுடன் பெருமாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெருமாள் தூக்கில் பிணமாக தொங்கினார்.

மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்ரீதர் வினோத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story