பீடி சுற்றும் பெண்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்


பீடி சுற்றும் பெண்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2019 3:30 AM IST (Updated: 4 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

பீடி சுற்றும் பெண்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாப்பாக்குடி பகுதியில் பிரசாரம் செய்த தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் கூறினார்.

முக்கூடல்,

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம், நேற்று காலை பாப்பாக்குடி ஒன்றியம் உடையாம்புளியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், பாப்பாக்குடி ஒன்றிய பகுதிகளில் விவசாயத்தையும், பீடி சுற்றும் தொழிலையும் செய்து வருகின்றனர். விவசாயத்தை மேம்படுத்த கடனா அணை, காங்கேயம் கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பீடி தொழிலாளர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும். முக்கூடலில் உள்ள பீடித்தொழிலாளர் மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். பீடி சுற்றும் பெண்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்“ என்றார்.

பின்னர் அவர் காத்தபுரம், ஓடைமரிச்சான், காமராஜ்நகர், இலந்தகுளம், தாளார்குளம், கலியன்குளம், ஓ.துலுக்கப்பட்டி, கண்டபட்டி, மருதம்புத்தூர், காசிநாதபுரம், அம்பேத்கர் காலனி, புதுப்பட்டி, பனையன்குறிச்சி, குமாரசாமிபுரம், காந்திநகர், கீழபாப்பாக்குடி சமத்துவபுரத்தில் மதியம் பிரசாரத்தை முடித்தார். மாலையில் அரசன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் ஞானதிரவியம் அரியநாயகிபுரம், சடையப்பபுரம், மைலப்புரம், சிங்கம்பாறை, சிவகாமிபுரம், முக்கூடல், அண்ணாநகர், ரஸ்தாவூர், புதுக்கிராமம், பாப்பாக்குடி, நத்தன்தட்டை, நத்தன்காலனி, ரெங்கசமுத்திரம், வழுதூர், செங்குளம், கபாலிபாறை, இடைகால், பள்ளக்கால், கலிதீர்த்தான்பட்டி, அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, கீழகுத்தப்பாஞ்சான், வேலாயுதசாமி குடியிருப்பு, மேல குத்தப்பாஞ்சான், காளத்திமடம், ஆணையப்பபுரத்தில் பிரசாரத்தை முடித்தார்.

பிரசாரத்தின்போது பூங்கோதை எம்.எல்.ஏ, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, முக்கூடல் நகர செயலாளர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர்கள் ஆனைகுட்டி பாண்டியன், சந்தனமுத்து, காங்கிரஸ் ஒன்றிய தலைவர்கள் அரிநாராயணன், ஜெயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொதுச்செயலாளர் வேலாயுதம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தமிழ்நாடு சைவ வேளாளர் சமுதாயத்தின் மாநில தலைவர் புளியரை ராஜாவை சந்தித்து ஆதரவு கேட்டார். டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., கணபதியப்பன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
1 More update

Next Story