குடும்ப பிரச்சினையில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
நிலக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் 3 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ.ஜீவா விசாரணை நடத்துகிறார்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியை சேர்ந்தவர் சரவணன். லாரி டிரைவர். அவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 24). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது. தற்போது புவனேஸ்வரி 3 மாத கர்ப்பமாக இருந்தார்.
குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட புவனேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புவனேஸ்வரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ.ஜீவாவும் விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினையில் கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story