திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் ஆய்வு


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 9:09 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் செலவின் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மேற்கொள்ளும் செலவினங்கள் குறித்து பராமரிக்கப்பட வேண்டி 3 பகுதிகளை கொண்ட பதிவேடுகள் வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பதிவேடுகளில் வேட்பாளர்களின் செலவினங்களை முறையாக பதிவு செய்து பராமரித்து தேர்தல் பிரசார காலத்தில் 3 முறை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் ஆய்வு செய்வதற்கு அளிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் கலந்துகொண்டு செலவின பதிவேடுகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் பத்மராம்மிர்தா, அனில்குமார் ஆகியோர் முன்னிலையில் சமர்பித்தனர். அவர்கள், அந்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேர்தல் செலவின கண்காணிப்பாளர் ஜி.வெங்கட்ராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) வெங்கடரமணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையடுத்து வருகிற 10-ந் தேதியும், 16-ந் தேதியும் வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
1 More update

Next Story