திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற 260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற 260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற 260 கிலோ புகையிலை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி உதவி பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று காலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ராயபுரம் நோக்கி சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

அந்த ஆட்டோவின் பின்னால் இருந்த மூடைகளை பிரித்து பார்த்தபோது அதில் பாக்கெட், பாக்கெட்டுகளாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்டோவுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த திருநாவுக்கரசு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது ஆட்டோ டிரைவரான குமரப்பபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் தனராஜ்(44) தனது உரிமையாளரான ராயபுரத்தை சேர்ந்த சுரேஷ், இந்த மூடைகளை ஏற்றி ராயபுரத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். ஆனால் சுரேஷ் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆட்டோவில் மொத்தம் 260 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது தொடர்பாக, ஸ்டீபன் தனராஜ், சுரேஷ் ஆகியோர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் தனராஜை கைது செய்தனர். பறக்கும் படையினர் சோதனையில் புகையிலை பொருட்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story