வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 5 April 2019 4:00 AM IST (Updated: 5 April 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம், 4 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை முத்தையா நகரை சேர்ந்தவர் சரஸ்வதி(வயது 74). இவரது மகள் பாரதி(45). இருவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம், 4 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story