கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துளிர் விடும் பலா மரங்கள் விளைச்சல் இல்லாததால் விலை உயர வாய்ப்பு

கீரமங்கலம் பகுதியில் கஜா புயால் பலா மரங்கள் முறிந்து சாய்ந்தன. தற்போது முறிந்த மரங்கள் துளிர்த்து வருகின்றன. விளைச்சல் இல்லாததால் இந்த ஆண்டு பலா பழங்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
கீரமங்கமல்,
2018 நவம்பர் 16-ந் தேதி அதிகாலை வீசிய கஜா புயலின் கடுமையான காற்றில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான சாலையோர புளியமரங்கள், விவசாயிகளால் வளர்க்கப்பட்ட மா, பலா, வாழை, தென்னை, தேக்கு, சந்தனம் என்று அனைத்து மரங்களும், வேரோடும், ஒடிந்தும் சாய்ந்தன. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. அன்று முதல் விவசாயிகள் செய்வதறியாது வாழ்ந்து வருகின்றனர்.
இதில் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, அணவயல், நெடுவாசல், சேந்தன்குடி, குளமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுமார் 100 கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகமாக வளர்த்த மரங்களில் ஒன்று பலா. கஜா புயலால் சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பலா மரங்களும் ஒடிந்து சாய்ந்தன. இதனால் பலா விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்க தொடங்கினார்கள்.
துளிர்க்கும் மரங்கள், காய்கள் இல்லை
இந்த நிலையில் வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றிய விவசாயிகள் கிளைகள் முறிந்த மரங்களை மீண்டும் துளிர்க்கும், காய் கொடுக்கும் என்று தண்ணீர் பாய்ச்சி வளர்த்து வருகிறார்கள். ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட எந்த மரமும் காய்க்கவில்லை. அதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டு வருமானம் கொடுத்த பலா மரங்களில் தற்போது காய்கள் இல்லாமல் வருமானமும் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். காய்கள் இல்லாததால் இந்த ஆண்டு பலா பழங்களின் விலை உயரலாம் என்ற நிலை உள்ளது.
பலாவுக்கு நிவாரணம் கூட இல்லை
இதுகுறித்து கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம பலா விவசாயிகள் கூறுகையில், சாதாரணமாக சிறு, குறு விவசாயிகள் கூட பலா மரங்களை வளர்த்து வந்தனர். தோப்புகளாகவும், வரப்பு ஓரங்களிலும் வளர்த்தனர். பலர் வீடுகளை சுற்றிலும் பலா மரம் வளர்த்து ஆண்டு வருமானம் பெற்றனர். ஆனால் சில மணி நேரம் வீசிய புயல் காற்றில் அனைத்து மரங்களையும் அடியோடு சாய்ந்த பல லட்சம் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் குழந்தைகளை படிக்க வைக்க கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து மரங்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து கணக்கெடுத்தார்கள். குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் கொடுத்தனர். அதேபோல தென்னைக்கு ஓரளவு நிவாரணம் கொடுத்தார்கள். ஆனால் மற்ற மா, பலா, வாழை, தேக்கு சந்தனம் உள்ளிட்ட எந்த மரங்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. இதனாலும் மரம் வளர்க்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு பலா மரங்களும் துளிர்க்கிறது. ஆனால் காய் காய்க்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஒரு பக்கம் மற்றொரு பக்கம் விளைச்சல் இல்லாததால் பலா பழங்களின் விலை உயர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என்றனர்.

Related Tags :
Next Story