மாவட்ட செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கைகலெக்டர் ரோகிணி எச்சரிக்கை + "||" + If you are involved in the election campaign, Collector Rohini warns

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கைகலெக்டர் ரோகிணி எச்சரிக்கை

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கைகலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடும்வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தேர்தல் விதிமுறை மீறலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு அகல் விளக்கு ஏற்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் தலைமையில் வாக்களிப்பது தொடர்பான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது கண்டிப்பாக சிறுவர்களை ஈடுபடுத்த கூடாது. மீறி சிறுவர்களை ஈடுபடுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சமூக விரோதிகள் 266 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
2. சேலத்தில், வாக்கத்தான் விழிப்புணர்வு ஊர்வலம்
சேலத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்கத்தான் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
3. சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: கலெக்டர் ரோகிணி, ஆணையாளர் சதீஷ் வாக்களித்தனர்
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் கலெக்டர் ரோகிணி, ஆணையாளர் சதீஷ் ஆகியோர் வாக்களித்தனர்.
4. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது: வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் கலெக்டர் ரோகிணி உத்தரவு
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
5. நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் ரோகிணி தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை