தேர்தல் விதிகளை மீறியதாக திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு


தேர்தல் விதிகளை மீறியதாக திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 April 2019 11:00 PM GMT (Updated: 5 April 2019 8:05 PM GMT)

தேர்தல் விதிகளை மீறியதாக திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் பூண்டி. கலைவாணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் ஊர்குடி, அம்மையப்பன், தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.

இந்தநிலையில் திருவாரூர் அருகே தண்டலையில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தண்டலை கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா, திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பூண்டி கே.கலைவாணன் மீது தேர்்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story