கீழ்வேளூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


கீழ்வேளூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 5 April 2019 10:00 PM GMT (Updated: 5 April 2019 8:05 PM GMT)

கீழ்வேளூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட குழுவை கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதியில் திருக்குவளை மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று கீழ்வேளூர் சந்தை தோப்பு, ஆழியூர், ஒக்கூர், வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story