பயந்தரில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 3 பேர் கைது
பயந்தரில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வசாய்,
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர் மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கடந்த 3-ந்தேதி மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியை மையப்படுத்தி தானே பயந்தர் கிழக்கு நவ்கர் சாலையில் உள்ள சலாசர் என்ற கட்டிடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த கட்டிடத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
3 பேர் கைது
இந்த சோதனையின் போது, கட்டிடத்தின் ஒரு அறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.58 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கைதானவர்கள் பெயர் ராகேஷ் சர்மா(வயது42), விஜய் திவாாரி(39), அங்கித் சோலங்கி(22) என்பது தெரியவந்தது.
3 பேர் மீதும் போலீசார் பாம்பே சூதாட்ட தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story