நவிமும்பையில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்


நவிமும்பையில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 6 April 2019 3:57 AM IST (Updated: 6 April 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதமாக ரூ.1 லட்சம் வசூலிக்கப்பட்டது.

நவிமும்பை,

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி நவிமும்பை பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ராமசாமியின் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் துர்பே ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மற்றும் சீவுட்ஸ்- டராவே பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இந்த சோதனையின் போது துர்பே ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோலும், சீவுட்ஸ்- டராவே 23-வது செக்டரில் 3 டன்னும் என மொத்தம் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு மாநகராட்சியினர் அபராதம் விதித்தனர். இதன்படி மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Next Story