மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை + "||" + Contracts suicide by credit risk

கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை

கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை
கடன் தொல்லையால் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்,

இனயம் சின்னத்துறையை சேர்ந்தவர் பங்கிராத், மீனவர். இவருடைய மகன் ஆன்ட்ரூ பியூஜின் சேம் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பி.பி.ஏ. பட்டதாரியான இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்தார்.


தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தை ஈடுசெய்ய பலரிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பணத்தை கடன் கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், ஆன்ட்ரூ பியூஜின்    சேம்  தனது            காரில் ராஜாக்கமங்கலம் அருகே ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு       சென்றார். அங்கு கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு அதன் அருகே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் கடற்கரையில் வாலிபரின் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை
புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
3. தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
செம்பனார்கோவில் அருகே பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
சோழசிராமணி அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை