நிறமும்.. மனதும்..


நிறமும்.. மனதும்..
x
தினத்தந்தி 7 April 2019 8:30 AM IST (Updated: 6 April 2019 9:15 PM IST)
t-max-icont-min-icon

வண்ணங்களுக்கும், நமது மனதிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மையும் நிறங்களுக்கு இருக்கிறது.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் சிவப்பு நிறத்தில் உடை அணிந்து செல்லலாம். சிவப்பு துண்டு, சிவப்பு நிற தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லலாம். ஜிம்மில் உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறம் உற்சாகம் அளிக்கும். அது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலைக்கு அழைத்து செல்லும். வீட்டில் உள்ள துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கலாம். அந்த நிறங்களில் துணிகளையும் வாங்கி பயன்படுத்தலாம். அந்நிறங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் செயல்பட வைக்கும்.

நீல நிறமும் மனதுக்கு இதமளிக்கும். அது அமைதியான மனநிலையை உருவாக்கி வேறு பக்கம் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும். சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும் போது ஆரஞ்சு நிறத்தை இடம் பெற செய்யலாம். அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் பொருத்தமாக இருக்கும். உற்சாகத்தை அதிகப்படுத்தி, சட்டென்று கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அது அமைந்திருக்கும்.
1 More update

Next Story