கார் மோதி கல்லூரி மாணவர் பலி பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம்


கார் மோதி கல்லூரி மாணவர் பலி பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 7 April 2019 3:45 AM IST (Updated: 7 April 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஓட்டலுக்கு பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய கல்லூரி மாணவர், கார் மோதி இறந்தார்.

கள்ளப்பெரம்பூர்,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் ஆடம்ராஜ்குமார்(வயது20). இவர் தற்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஆடம்ராஜ்குமார் கல்லூரியில் படித்து கொண்டே தினமும் காலையில் வீடுகளுக்கு பால்பாக்கெட்டுகளை வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆடம்ராஜ்குமார் பால்பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சை அருகே புதுக்குடியில் உள்ள ஓட்டலில் பால்பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு மீண்டும் திருவெறும்பூர் செல்ல புதுக்குடியில் உள்ள சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் சாலையை கடந்த போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த ஆடம்ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடம்ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பால்பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய சென்ற கல்லூரி மாணவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
1 More update

Next Story