திருவள்ளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


திருவள்ளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தொழுவூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சுதா (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.

இந்தநிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். சுதா தொழுவூரில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் அவருக்கு கடன் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதா தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story