மாமல்லபுரத்தில் மணல் சிற்பம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு


மாமல்லபுரத்தில் மணல் சிற்பம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 6 April 2019 7:44 PM GMT)

மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக்கல்லூரி மாணவர்கள் மூலம் மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட மீன் வளத்துறை சார்பில் கடலோரம் வாழ் மீனவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக்கல்லூரி மாணவர்கள் மூலம் மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

காஞ்சீபுரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் முன்னிலையில் காஞ்சீபுரம் மாவட்ட 44 மீனவ கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், மீனவ மகளிர் குழுவினர் இந்த கை விரல் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் முன் தங்கள் கிராமங்களில் 100 சதவீதம் வாக்களிப்பதாக உறுதிமொழி ஏற்றனர். சுற்றுலா வந்த பயணிகள் பலரும் மணல் சிற்பம் முன் செல்பி எடுத்தனர். 2 நாட்கள் வரை காட்சி படுத்தப்பட உள்ள மணல் சிற்பத்தை யாரும் கலைக்காத வண்ணம் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் மணல் சிற்பம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட மகளிர் மேம்பாடு திட்ட அலுவலர் சீனிவாசராவ், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ராகவன், கொக்கிலமேடு ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story