சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 413 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தகவல்


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 413 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதலாக 413 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் 2-வது கட்ட தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் துர்காதத், மனோஜ்குமார் பந்தோகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி கூறுகையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவைகள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது 2-வது கட்டமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியன சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 297 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 297 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும், ஜெயங்கொண்டத்திற்கு 290 வாக்குப்பதிவு எந்திரங்களும், 290 வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும், குன்னத்திற்கு 320 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 320 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும், காட்டுமன்னார்கோவிலுக்கு 250 வாக்குப்பதிவு எந்திரங்களும், 250 வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும், புவனகிரிக்கு 291 வாக்குப்பதிவு எந்திரங்களும், 291 வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும், சிதம்பரத்திற்கு 260 வாக்குப்பதிவு எந்திரங்களும், 260 வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 413 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 524 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, தேர்தல் தனி தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர். 
1 More update

Next Story