விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2019 10:45 PM GMT (Updated: 6 April 2019 8:26 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சி மாவட்ட துணை செயலாளர் சந்திர பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்றது.

கறம்பக்குடி,

கறம்பக்குடி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சி மாவட்ட துணை செயலாளர் சந்திர பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் நன்றி கூறினார். 

Next Story