தேனி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு


தேனி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் தேனி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று அவர் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது, வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:–

நான் மக்களை நம்பியும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றால் மக்களின் குறைகளை முழுமையாக தீர்க்க பாடுபடுவேன். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நீர்மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

வைகை அணை, மஞ்சளாறு அணைகள் தூர்வாரப்பட்டு அதிக தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை தொடங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்த்து, நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story