பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் முரசு அடித்து பிரசாரம்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் முரசு அடித்து பிரசாரம் செய்தார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவர் நேற்றுசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளான புத்திரகவுண்டன் பாளையம், பழனியாபுரி, ஒட்டப்பட்டி, தென்னம்பிள்ளையூர், வீரா கவுண்டனூர், ஓலப்பாடி, முத்தக்கண்டனூர், ஆரியபாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, தமையனூர், மேற்கு ராஜாபாளையம், இடையப்பட்டி, தும்பல், தாண்டானூர், வெள்ளாளப்பட்டி, செக்கடிப்பட்டி, ஏ.குமாரபாளையம், கள்ளிப்பட்டி, வைத்திய கவுண்டன் புதூர், வேலூர் கரடிப்பட்டி, உமையாள்புரம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பேசும் போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் விவசாயி படும் இன்னல்களை அறிந்த காரணத்தால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி மலர வேண்டும். இதன் மூலம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர் எல்.கே.சுதீஷ், கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னத்தம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் முரசு அடித்து, வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்தனர். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
இதில் கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அர்ஜுனன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இளங்கோவன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் குணசேகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் நடராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ரஞ்சித் குமார், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story