காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஒன்றியங்களில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு


காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஒன்றியங்களில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி ஒன்றியங்களில் காங்கிரஸ் வேட்பாளர் செல்ல குமார் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ஏ.செல்லகுமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில், காவேரிப்பட்டணம் ஒன்றியம் கூரம்பட்டி, பாளேகுளி, எருமாம்பட்டி, நாகரசம்பட்டி பேரூர் மாமரத்தூர், வேங்கானூர், வேலம்பட்டி, சென்றாயம்பட்டி, என்.தட்டக்கல், காட்டுக்கொள்ளை, நாகரசம்பட்டி, வால்பாறை, புதூர், கம்புகாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று சென்று ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து காவேரிப்பட்டணம் ஒன்றியம் மாரிசெட்டிஅள்ளி, தளிப்பட்டி, பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், தட்ரஅள்ளி, சேப்பனூர், தாமோதரஅள்ளி, அகரம், ஆவத்தவாடி, போச்சம்பள்ளி ஒன்றியம் பாப்பிரெட்டிப்பட்டி, பண்ணந்தூர், வாடமங்கலம், அரசம்பட்டி, புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

ரெயில் பாதை திட்டம்

கிராமங்களுக்கு சென்ற வேட்பாளர் செல்லகுமாருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களிடம் பேசிய வேட்பாளர் செல்லகுமார், ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்றுவேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட முக்கியத்துவம் தருவேன். மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்க திட்டங்கள் கொண்டு வரப்படும் என கூறினார். பிரசாரத்தின் போது, தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சாந்தமூர்த்தி, தேங்காய் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, பேரூர் செயலாளர் பாபு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். 

Next Story