பராமரிப்பு பணி: துறைமுக வழித்தடத்தில் இன்று ரெயில்சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக இன்று துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடமான முல்லுண்டு - மாட்டுங்கா இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.31 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா, சயான் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்.
ஆனால் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யா விகார் ஆகிய இடங்களில் நிற்காது. அங்கு செல்ல விரும்பும் பயணிகள் அருகில் உள்ள ரெயில்நிலையங்களில் இருந்து கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் செல்லலாம்.
துறைமுக வழித்தடம்
துறைமுக வழித்தடத்தில் காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை குர்லா - வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.
இதேபோல காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் பன்வெல் - வாஷி, சி.எஸ்.எம்.டி. - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மாகிம் - கோரேகாவ் இடையே இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9.56 மணி முதல் மாலை 4.04 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.30 மணி வரை கோரேகாவ், அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story