100 டிகிரியை தாண்டியது: புதுச்சேரியில் வெயில் கொளுத்தியது


100 டிகிரியை தாண்டியது: புதுச்சேரியில் வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 7 April 2019 4:45 AM IST (Updated: 7 April 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

புதுச்சேரி,

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றைய தினம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மதிய வேளையில் அனல் காற்றும் உணரப்பட்டது. கடும் வெயில் காரணமாக ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினரும் பிரசாரம் செய்ய கடும் சிரமப்பட்டனர். வெயில் கொடுமை தாங்க முடியாமல் பிரசாரங்களை விரைவாக முடித்துக்கொண்டனர். வெயிலை தாக்குப்பிடிக்கும் வகையில் பொதுமக்கள் குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பழம், தர்பூசணி பழம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டனர். குளிர்பானங்களின் விற்பனையும் சூடுபிடித்தது.

நேற்றைய தினம் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் காரணமாக புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறைகளைவிட்டு வெளியே வர தயங்கினார்கள்.

பகல் நேரத்தில் வெளியே செல்லும் பெண்கள் துப்பட்டாவால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிகிறது.

மாலையில் வெயில் குறைய தொடங்கியதும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் காற்று வாங்க கடற்கரையில் குவிந்தனர்.


Next Story