காஞ்சீபுரத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பள்ளி மாணவன் பலி


காஞ்சீபுரத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-08T00:20:27+05:30)

காஞ்சீபுரத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். கார் டிரைவர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 15). காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை கார்த்திகேயன் தனது தந்தை குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றான்.

மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பள்ளி மாணவன் கார்த்திகேயன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த மாணவன் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story