மாவட்ட செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை + "||" + Farmers demand to have the vanadium in the vicinity of Koothanallur

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் வெண்ணாறு ஓடுகிறது. இந்த ஆறு மூலம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, அதங்குடி, தோட்டச்சேரி, பண்டுதக்குடி, சேகரை, பொதக்குடி, காடுவெட்டி, நாகங்குடி, பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


இந்த நிலையில் வெண்ணாற்றில் தற்போது குப்பைகள் நிறைந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் போல் காட்சியளிக்கிறது. ஆற்றில் மணல் திட்டுகள் உள்ளதால் மழைக்காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆறு தூர்வாராததால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

தூர்வார வேண்டும்

மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் ஆற்றில் களிமண் படிந்துள்ளது. ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் வரத்து தடுக்கப்பட்டு உள்ளது. வெண்ணாறு தூர்வாரப்படாததால் ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் லெட்சுமாங்குடிக்கு தாமதமாக வந்து சேருகிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லெட்சுமாங்குடியில் உள்ள வெண்ணாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்.
4. புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
5. எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் மன்னார்குடி அருகே பரபரப்பு
மன்னார்குடி அருகே எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.