தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு


தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 4:45 AM IST (Updated: 8 April 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்று பெரம்பலூர் பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பிற்பகல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியவுடன், அதில் இருந்து இறங்கிய ராஜ்நாத் சிங்கிற்கு திருச்சி கோட்ட பா.ஜ.க. சார்பில் கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு முடிந்ததும் ராஜ்நாத் சிங் பெரம்பலூர் மேற்கு வானொலித்திடலில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும், தமிழகத்தில் இந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள இந்தியா, 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலகில் பொருளாதாரத்தில் மிக அதிக முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இதனை சர்வதேச நிதி அமைப்பு (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்யப்படும். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக ரெயில் விடுவதற்கான ஆய்வுப்பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு 3 அல்லது 4 ஆண்டுகளில் பெரம்பலூருக்கு ரெயில் விடப்படும். காஷ்மீரில் புலவாமா தாக்குதலில் 42 ராணுவவீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்திய ராணுவத்தினரின் வீரத்தை கேலிசெய்கிறார்கள். பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம். பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தாலோ தக்க பதிலடி கொடுப்போம்.

இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு வாக்களித்து அவரை வெற்றிபெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
1 More update

Next Story